• Breaking News

    கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் ஆய்வு


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள விதைகள், உரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்.கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அவர் தற்போதைய பருவத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தருவதற்காக வைக்கப்பட்டு இருந்த  துவரை நெல் எள் விதைகளின் இருப்பு ஆகிவற்றை ஆய்வு செய்தவர் பொதுமக்களுக்கு ஆடாதொடை,  நொச்சி செடிகளை இலவசமாக வழங்கினார்.

    உடன் வேளாண்மை உதவி இயக்குனர் டெல்லிகுமார் வேளாண்மை அலுவலர் நவீன் பிரசாத், விதை அலுவலர்.கணேசன், மாவட்ட கவுன்சிலர் ,ராமஜெயம், கவுன்சிலர் ,மெய்யழகன் அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன்.கழக நிர்வாகிகள் காளத்தி வேளாண்மை துறை அதிகாரிகள் பொதுமக்கள்ஒன்றிய ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்  என உடன் இருந்தனர்.



    No comments