கும்மிடிப்பூண்டி: அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி வேணுகோபாலசுவாமி ஆலய கும்பாபிஷேகம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை மேட்டு காலனியில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத வேணுகோபாலசாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுதர்சன ஹோமம், கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை ,வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்பலங்காரம், யாகசாலை பூஜை புர்ணாஹூதி, தூபம், தீபம், நெய்வேதியம் நடைபெற்றது .
கும்பாபிஷேக தினமான சனிக்கிழமை மூன்றாம் காலையாக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது. பின் புரோகிரர்கள் வேத மந்திரங்கள் கலச புறப்பாடு நிகழ்வும் அதனை தொடர்ந்து ஆலய கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து மகா அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை ஆகிய நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாமிரெட்டி கண்டிகை கிராம வீதிகளில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார், ஊராட்சி துணைத்தலைவர் குணசேகர், ஒன்றிய கவுன்சிலர் சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சாமிரெட்டிக்கண்டிகை மேட்டுக்காலனி கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments