உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா திருவிழா..... ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் நிறைவு.....
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா திருவிழா, ஜம்பு சவாரி ஊர்வலம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கடந்த 3-ஆம் தேதி, தசரா திருவிழாவை கன்னட மூத்த இலக்கியவாதி ஹம்.ப.நாகராஜய்யா தொடங்கி வைத்தார்.
கடந்த 10 நாட்களாக நகரம் முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தேறின. விழாவின் இறுதி நாளான விஜயதசமியையொட்டி, 50 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி தேவிக்கு, முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் மலர் துாவி, தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
No comments