• Breaking News

    தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பு

     


    தமிழகம் முழுவதும் முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதோடு கிராம சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    ஆனால் இந்த முறை அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரும் நிலையில் மறுநாள் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக தீபாவளிக்கு மறுநாள் கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டாம் அதனை வேறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கோரிக்கைகள் எழுந்தது. 

    இதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் தற்போது கிராம சபை கூட்டங்களை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    No comments