திருச்சி மாநகரில் பேக்கரிகளில் அழுகிய முட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 215 கிலோ கேக் மற்றும் பிரெட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
நாமக்கல்லில் இருந்து மொத்தமாக அழுகிய முட்டைகளை கொள்முதல் செய்து பேக்கரிகளில் கேக் மற்றும் பிரெட்டுகள் தயார் செய்யப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், திருச்சி ஓ பாலம் பகுதியில் உள்ள பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேக்கரிகளில் இருந்த 8 ஆயிரம் அழுகிய முட்டைகளை பறிமுதல் செய்ததுடன், 2 பேக்கரிகளுக்கு சீல் வைத்தனர். அழுகிய முட்டைகள் மற்றும் காலாவதியான பொருட்களைக் கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
0 Comments