நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு, ஒரு கூலி தொழிலாளியான தந்தை தனது 10ம் வகுப்பு படிக்கும் முதல் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்த வழக்கு, ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சிறுமியின் தாய் தனது குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார்.அதன் பிறகு இரண்டு மகள்களையும் கூலி தொழிலாளி பராமரித்து வந்தார். இளைய மகள் பள்ளிக்கு சென்ற நேரத்தில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த தொழிலாளி மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தொடர்ந்து தனது மகளை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மறுத்தவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கூலி தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments