கன்னியாகுமரி: மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..... கைதுக்கு பயந்து மாமியார் தற்கொலை முயற்சி.....

 


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

திருமணத்திற்கு பிறகு சுருதி பாபு கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சுருதிபாபு நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி மற்றும் சுருதி பாபுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தனது மாமியாரின் கொடுமையால் தான் நான் தற்கொலை செய்துகொண்டேன் என சுருதி பாபு (புதுப்பெண்) வாட்ஸ்-அப்பில் ஆடியோ ஒன்றை தனது தாயாருக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், கைதுக்கு பயந்து மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில், செண்பகவல்லி சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments