வாக்கிங் சென்ற தொண்டி பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலரை, ரவுடி கும்பலுடன் சென்று திமுக துணை சேர்மனின் கணவர் தாக்கியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி நிர்வாகம், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளதற்கு 7வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காத்தார் ராஜா கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடைப் பயிற்சிக்கு சென்ற அவரை, ரவுடி கும்பலுடன் சென்று பேரூராட்சி துணைச் சேர்மன் அழகு ராணியின் கணவர் ராஜேந்திரன் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜா, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வரும் ராஜேந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments