• Breaking News

    நாகை: தேவூர் ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா பூச்சொரிதலுடன் கோலாலமாக தொடங்கியது


    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. 18 சித்தர்களுடன் உலகிலேயே கிழக்கு முகமாக துர்க்கை அம்மன் அருள் பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான இங்கு நவராத்திரி திருவிழா பூச்சொரிதலுடன் இன்று வெகு விமர்சையாக துவங்கியது. 

    தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோயில் நிர்வாகி சிவஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் தலைமையில்  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக தேவதுர்க்கை அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பூக்கள் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. 

    இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான மகா சண்டியாகம் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் நேரம் (இணையதளம்) எடிட்டர் 

    நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி 

    விடுமுறை தொடர்புக்கு 9788341834

    No comments