முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தங்கியிருந்த விடுதியில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் அறையில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட 27 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான பிற இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
No comments