நகலூர் எஸ்.டி.செபஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் அருகே உள்ள நகலூர் எஸ்.டி.செபஸ்டின் மேல்நிலைப்பள்ளியில் அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி எஸ்.டி.செபஸ்டின் மேல்நிலைப்பள்ளின் முதல்வர் அமல்ராஜ் தலைமையில் பள்ளியன் ஆசிரியர் ஆசிரியைகள் முன்னிலையில் பள்ளியின் மாணவ , மாணவிகள் 18 வயது பூர்த்தியடையாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது , பெற்றோர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் ஆட்கள் ஏறி செல்ல கூடாது, தீபாவளி பண்டிகை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும், வீட்டிற்கு தெரியாமல் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்க செல்ல கூடாது மற்றும் அதிக அளவில் தொலைபேசிகளை உபயோகப்படுத்தக் கூடாது இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.செபஸ்டின் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments