உத்தரப்பிரதேசத்தில் தேடப்பட்டு வந்த ஓநாயை அடித்து கொன்ற கிராம மக்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த ஓநாயை கிராமவாசிகள் அடித்துக் கொன்றனர். பஹ்ரைச் பகுதியில் சில மாதங்களாகவே சுற்றித் திரிந்த 6 ஓநாய்கள், குழந்தைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதில் 10 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 55 பேர் பலத்த காயமடைந்தனர். 6 ஓநாய்களில் 5-ஐ வனத்துறையினர் பிடித்த நிலையில், ஒன்று மட்டும் வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், கால்நடையை வேட்டையாட முயன்றபோது 6ஆவது மற்றும் கடைசி ஓநாயை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் ஓநாயின் உடலை மீட்டனர்.
No comments