பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதம். புரட்டாசி மாதம் கடவுள் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், கடந்த 4 வாரங்களாக பொதுமக்கள் விரத முறையை கடைப்பிடித்தனர். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிலையில் நேற்றுடன் புரட்டாசி மாதம் சனிக்கிழமை முடிந்தது. இதனைத்தொடர்ந்து இன்று காலைமுதலே இறைச்சி கடைகளிலும், மீன் துறைமுகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அந்த வகையில் கடலூர் துறைமுகம் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டதோடு, நேற்று ஆங்காங்கே இறைச்சி கடைகள்மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.
இதில் வஞ்சரம் கிலோ ரூ.650 முதல் 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக்கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.
0 Comments