• Breaking News

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் சுட்டு கொலை

     


    மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், NCP தலைவருமான பாபா சித்திகி, மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு பண்டாரா பகுதியில், அவரது மகன் MLA ஜீஷான் சித்திகியின் அலுவலகத்திற்கு அருகில் நடந்தது. மூன்று மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

    பலத்த காயமடைந்த அவர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்காக இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மூன்றாவது நபரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments