எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான கல்லூரிகளில் ஐடி ரெய்டு
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் கூட்டுறவு இளங்கோவன். இவர் சேலம் மாவட்ட புறநகர் ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தவர். இவருக்கு சொந்தமான கல்லூரிகள் முசிறியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் அவருக்கு சொந்தமான எம்ஐடி பாலிடெக்னிக் மற்றும் வேளாண்மை கல்லூரிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
No comments