நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதி உள்பட 3 விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து உதகை நட்சத்திர விடுதி மேலாளர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் விடுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல் குன்னூர் தனியார் பள்ளிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பள்ளியில் உள்ள குழந்தைகள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
0 Comments