வணிக சிலிண்டர் விலை உயர்வு.....
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி சிலிண்டரின் விலை ரூ.1903ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில், செப்டம்பர் 1ஆம் தேதி விலை ரூ.38 உயர்த்தப்பட்டு 1,855க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரூ.48 உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் முன்பு, ஆகஸ்ட் 1ஆம் தேதி ரூ.7.50 அதிகரிப்புடன், விலை ரூ.1,817க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலை உயர்வுகள் வணிக நிறுவனங்கள் மற்றும் சிறிய தொழில் கடைகளுக்கு சுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், வர்த்தகப் பகுதிகளின் செலவுகள் கூடும் என்பதால், இதனால் பொருட்களின் விலை உயர்வை எதிர்பார்க்கலாம்.
No comments