டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சார்பாக இன்று சென்னை,பூந்தமல்லியில் அந்நிறுவன வளாகத்தில் 16ஆம் ஆண்டு ஆயுத பூஜை சிறப்பாக நடைபெற்றது. அனைத்து ஓட்டுனர்/ ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ஆறுமுகசாமி முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது. முதலில் திருமதி.கீதா ஆறுமுகசாமி குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
அனைத்து ஊழியர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உறி அடித்தல், மியுசிகல் சேர் , ஓவிய போட்டி, கயிறு இழுத்தல், கோல போட்டி என பலவிதமான போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டது. மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் திரு. ஆறுமுகசாமி பேசும் போது இந்தாண்டு புதிய வண்டிகள் வாங்கி மேலும் வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தேவையானவை செய்து தரப்படும் என்றும். அனைத்து ஊழியர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
0 Comments