• Breaking News

    நீங்கள் சொல்வதை சொல்லுங்கள்; நாங்கள் செய்வதை செய்கிறோம்..... அரசின் உத்தரவை மதிக்காத ஆம்னி பேருந்துகள்

     


    நாளை தீபாவளி பண்டிகை பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு வருவார்கள். பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.இந்த நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

     சென்னையிலிருந்து மதுரை செல்ல சாதாரண நாட்களில் 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது 1900 முதல் 2,500 ரூபாய் வரையும், திருநெல்வேலிக்கு 2000 முதல் 3500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார் ஆனால் ஆம்னி பேருந்துகள் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் நாங்கள் செய்வதை செய்கிறோம் என இருமடங்காக கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் உயர்த்தியுள்ளனர். கட்டண உயர்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments