• Breaking News

    சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாகையில் ஆர்ப்பாட்டம்

     


    செப்டம்பர் 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு ஆதரவை தெரிவித்து . தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருபெரும்புத்தூரில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 16 ஆண்டுகளாக தொழிற்சங்கம் இல்லாமல் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் தங்களின் உரிமைகளை பெறுவதற்காக கடந்த ஜுன் மாதத்தில் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை தொடங்கியுள்ளனர். சங்கம் அமைக்கப்பட்டது முறையாக நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர். கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில்தான் சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும் மற்றும் கூட்டு பேரம் பேசும் உரிமை உள்ளிட்ட நாட்டில் சட்டங்கள் வழங்கியுள்ள உரிமைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் இந்தியா ஆலையின் மொத்தம் தொழிலாளர்கள் 1723 பேர்களில் சுமார் 90 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

    தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை பெரும்பான்மை சங்கத்துடன் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது. ஆனால் சாம்சங் இந்தியா நிறுவனம் அச்சங்கத்துடன் பேச மறுத்து அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது. இந்நிறுவனம் உலகில் அவப்பெயர் பெற்ற நிறுவனம். நமது நாட்டில் ஜனநாயக உரிமைகளை அடக்க முயல்கிறது. தொழிற்சங்க சட்டம் 1926 மற்றும் தொழிற்சங்க தகராறு சட்டம் 1947, ஐ.எல்.ஓ. தீர்மானம் 87,98, சர்வதேச தொழிலாளர் தரநிலை ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது.

    இந்நிறுவனம் வீட்டு உபயோக சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். இந்தியாவில் கொள்ளை லாபம் அடிக்கிறது. இந்த ஆலை தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரம், குளிர்சாதன பெட்டி, சடலவைப்பெட்டி அல்லது தொலைக் காட்சிப்பெட்டி போன்ற ஒவ்வொரு பொருளையும் 10 விநாடிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம், தொடர்ந்து ஓய்வின்றி நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வேலை செய்தல், பாதுகாப்பற்ற பணி சூழல் ஆகியவற்றிற்கு ஆளாகின்றனர். இதே நிறுவனம் சியோலில் உள்ள தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் வழங்குகிறது. ஆனால் நமது நாட்டின் தொழிலாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் அல்லது 25 ஆயிரம் என்று ஊதியம் தரப்படுகிறது. அப்படி இருக்க 2024ல் இந்நிறுவனம் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது.

    நிர்வாகம் பெரும்பான்மை சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது. கோரிக்கை குறித்து பேசுவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு செல்ல முயன்ற சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்சங் தொழிலாளர்கள் காஞ்சிபுரம் நகருக்குள் நுழைவதையே தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியுள்ளது.

    தங்களது சட்ட பூர்வமான ஜனநாயக உரிமையை வலியுறுத்தி போராடும் சாம்சங் இந்தியா தொழிலாளர்களை காவல்துறை கைது, மிரட்டுவது. அச்சுறுத்துவது, அதிகாரத்துடன் நடந்துகொண்டு போராட்டங்களை நடத்தவிடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் முழுக்க முழுக்க கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பார்க்கிறது.

    இத்தகைய செயல்பாட்டினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு, எந்தவொரு பன்னாட்டு நிறுவனமும் நமது நாட்டின் சட்ட திட்டங்களை சிதைக்கவும், மீறவும்  அனுமதிக்கக்கூடாது என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொண்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்க

    வேண்டும். தொழிற்சங்கத்தை உடனே பதிவு செய்ய வேண்டும். பெரும்பான்மை சங்கத்தோடு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும், தொழிலாளர் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளருக்கு உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆக்டோபர் 1ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இன்று ( 01.10.24  )  நாகப்பட்டினம் நீதிமன்றம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் சு.வளர்மாலா தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் விளக்கவுரையாற்றினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சித்ரா காந்தி, போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டலச் செயலாளர் எஸ்.ஆர்.இராஜேந்திரன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலாளர் தங்கமணி, ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆதரவு உரை நிகழ்த்தினர். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் நன்றியுரையாற்றினார். 

    மக்கள் நேரம் இணையதளம் எடிட்டர்

    நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி 

    விடுமுறை தொடர்புக்கு 9788341834

    No comments