• Breaking News

    கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

     


    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    இந்த நிலையில் , கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இன்று அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் (கடலூர் மாவட்டம்) நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது.

    இந்த தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) மு. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    No comments