சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகாலை கரையை கடந்தது
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் சென்னை அருகே கரையை கடந்ததாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழுந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகத்தின் பகுதிகளின் மேல் நிலவு வருகிறது.மேலும் சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கிய நிலையில் சற்று மழையின் தாக்கம் குறையும் என்று வானிலை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இன்று அதிகாலை சென்னையில் வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments