பிளாஸ்டிக் பாட்டில் போட்டால் மாஸ்க் வரும்..... தமிழகத்தில் புதிய விழிப்புணர்வு அறிமுகம்.....
தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மஞ்சப்பை திட்டத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை தடுக்க ஐந்து ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு எந்திரம் புதிதாக வைக்கப்பட்டுள்ளது. அதில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் சென்சார் மூலம் முக கவசம் இலவசமாக கிடைக்கும். அந்த இயந்திரங்கள் சோலார் முறையில் இயங்குகிறது. சுமார் 300 பிளாஸ்டிக் பாட்டில்களை அதில் போட்டு வைக்கலாம். 500 முகக்கவசம் அதில் வைக்க முடியும்.மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அந்த எந்திரத்தில் காலில் பாட்டில்களை போட்டு முக கவசத்தை பெற்று வருகின்றனர். இது குறித்து குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் ரமா கூறியதாவது, காலி பிளாஸ்டிக் பாட்டில் போடும் எந்திரம் வைத்துள்ளோம்.
அதை வைத்த உடனே ஏராளமானோர் பயன்படுத்தியுள்ளனர். மருத்துவமனைக்கு வருபவர்களில் 75 சதவீதம் பேர் காலி பாட்டில்களை போட்டு முக கவசத்தை எடுத்து சொல்கின்றனர்.இது போன்ற இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும். புதிதாக ஒரு எந்திரத்தை பார்க்கும்போது அது எப்படி இயங்கும் என்பதை காண மக்கள் காலி பாட்டில்களை போடுவார்கள். அதனால் நாளடைவில் காலி பாட்டில்களை பொது இடத்தில் போடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கும் என கூறியுள்ளார்.
No comments