கும்மிடிப்பூண்டி அதிமுக பேரூர் கழகம் ஒன்றிய கழகம் சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக கும்மிடிப்பூண்டி நகர ஒன்றிய கழகம் சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் திமுக அரசால் 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து சொத்து வரி உயர்வை கண்டித்து உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் கருப்புச்சட்டை அணிந்து திமுகவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விளை உயர்வு பல்வேறு வரிகளை உயர்த்திய இந்த விடியா திமுக அரசு திரும்பப் பெற வேண்டி கண்டன கோஷங்களை எழுப்பினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் ரவி மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே. எம் எஸ். சிவக்குமார் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஸ்ரீதர்,பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், இளைஞர்கள்இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளர் டி.சி மகேந்திரன் சிறுபான்மை பிரிவு செயலாளர் சிராஜுதீன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முல்லைவேந்தன், ஒன்றிய துணைச் செயலாளர் நாகராஜ் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் பல்லவாடா ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இமயம் மனோஜ், பெரிய ஓபாலபுரம் ஏழுமலை.கோபி வீரன்.மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments