ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.... சாரல் மழையில் படகு சவாரி செய்து ஆனந்தம்


 ஊட்டி படகு இல்லத்தில் சாரல் மழையில் நனைந்தவாறே படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் வார விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவி வருகிறது. அதேபோல, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இதமான காலநிலையுடன் இரண்டாம் சீசன் நிலவி வருகிறது.

இச்சமயத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிகின்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.

மேலும், சாரல் மழையில் நனைந்தவாறே மிதி படகு மற்றும் துடுப்பு படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments