கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் பேரூர் அதிமுக சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் சி.பொன்னையன் பங்கேற்பு
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மற்றும் கும்முடிபூண்டி பேரூர் அதிமுக சார்பில் கழக வளர்ச்சிப் பணிகள்,மக்கள் நலப் பணிகள்,செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பெத்திகுப்பம் ஜே.எஃப்.என் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழகச் செயலாளர் வி.கோபால் நாயுடு தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவருமான கே.எம்.எஸ்.சிவக்குமார் முன்னிலை வகித்தார்.இதில், சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும்,கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன்,பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பி.பலராமன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா ஆகியோர் கலந்துகொண்டு 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு? எதிர்கொள்வது என்பது குறித்தும்,தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அரியணையில் அமர எவ்வாறு? பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றி பேசினர்.
இந்நிகழ்ச்சியில்,பொதுக்குழு உறுப்பினர் ஆர்.அபிராமன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீதர், சியாமளாதன்ராஜ்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் டி.முல்லைவேந்தன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ.சிராஜ்தின்,மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.ராகேஷ்,ஒன்றிய துணைச் செயலாளரும்,ஒன்றிய குழு உறுப்பினருமான ஏ.டி.நாகராஜ் மற்றும் மாவட்ட,ஒன்றிய, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில், கும்முடிபூண்டி பேரூர் கழகச் செயலாளரும்,நான்காவது வார்டு கவுன்சிலருமான எஸ்டிடி எஸ்.ரவி நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய கழகச் செயலாளர் வி.கோபால் நாயுடு தலைமையில் கும்முடிபூண்டி ஒன்றியம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments