ராமேஸ்வரம்: புனித கொடித் தீர்த்தத்தில் நீராட பக்தர்களிடம் பண வசூல்..... கல்லாக்கட்டும் கோயில் நிர்வாகத்தினர்.....


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொள்ள தினசரி லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவது வாடிக்கை. இங்கு வரும் பக்தர்கள் அக்னித் தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு கோயிலுக்குள் சென்று, அங்குள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடிச் சென்றால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

அதனடிப்படையில் 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடுவதற்காக பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் சார்பில் தலா 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கோயிலின் உள்ளேயுள்ள 22 தீர்த்தக் கிணறுகளில், 21 கிணறுகளில் இருந்து மட்டுமே தண்ணீர் இரைத்து பக்தர்கள் மீது ஊற்றப்படுவதாக கூறப்படுகிறது. 22வது தீர்த்தக் கிணறானது காசி கங்கை தீர்த்தத்திற்கு நிகரான கொடித் தீர்த்தம் என்பதால், அதிலிருந்து தண்ணீர் இரைத்து ஊற்ற பக்தர்களிடம் இருந்து சுமார் 100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கோயில் நிர்வாகத்தினரே பங்குபிரித்துக் கொண்டு கல்லாக்கட்டி வருவதாகவும் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments