• Breaking News

    வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா...?

     


    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ரானா டகுபதி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் நேற்று வெளியான நிலையில் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

    அதன்படி இந்தியா முழுவதும் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாம். அதே சமயத்தில் நடிகர் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் திரைப்படம் 48 கோடி வரை வசூலித்து இருந்தது. அதை ஒப்பிட்டு பார்க்கையில் வேட்டையன் திரைப்படம் வசூலில் குறைவுதான். மேலும் விடுமுறைகள் அதிகளவில் இருப்பதால் வரும் நாட்களில் வேட்டையன் திரைப்படம் வசூல் சாதனை புரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    No comments