கவிஞர் திலகம்- கலைமாமணி திருச்சி பாரதன் அவர்களின் சாதனை இதோ....

 


இந்நன்னாளில் கவிஞர் திலகம்,கலைமாமணி,திரு.திருச்சி பாரதன் அவர்களின் புகழை போற்றி வணங்குகின்றோம்.

ஐந்து முதல்வர்களால் பாராட்டப்பெற்ற கலைமாமணி திரு.திருச்சி பாரதன்.

.இவரால் பெருமையடையும் இதழியலாளர்களும் யதுகுலமும்..

 #இவரது இயற்பெயர் தங்கவேலன் அதன் சுருக்கதுடன் பாரதியார் நினைவாக பா என்ற எழுத்து இணைய பாரதன் ஆனார்..

 #அவரது பெற்றோர் திருச்சி மாவட்டத்தில் பெருமாள் எடத்தெரு பாலக்கரை சேர்ந்த ரங்கசாமி கோனார் காமாட்சி அம்மாள்..

 30.09.1934 ஆம் ஆண்டு பாரதன் பிறந்தார்..

 12 வயதில் இலக்கியத்தில் ஈடுபட்டு 72 வயதில் 72 படைப்புகளின் ஆசிரியர் 85 அறிஞர் பெருமக்களின் ஆசியுரை பெற்றவர்..

 2500 பாடலுக்கு மேல் அச்சில் கண்டவர்..

#எந்தக் கவிஞரும் காணாத வகையில் இவரது பாடல்களை 181 முழுஇசைநிகழ்ச்சிகளாக  தலா 3 மணிநேரம் இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் பாடியுள்ளார்...

#திருச்சி வானொலி அங்கீகரித்த கவிஞர்களுள் ஒருவர்..

 #பூந்தோட்டம் என்னும் இவரது குழந்தைப்பாடல்கள் நூலை தமிழக அரசு கரும்பலகை திட்டத்தின் கீழ் 5995 பிரதிகள் வாங்கியுள்ளது..

 #திருவையாறு தமிழிசை மன்றத்தில் துணைத் தலைவராகப் பல்லாண்டுகள் பணியாற்றி உள்ளார்..

#சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட பிரதிநிதியாகவும், பாரதிதாசன் உருவாக்கிய சென்னை தமிழ் கவிஞர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும், திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணை செயலாகவும் பொறுப்பேற்று பதவி வகித்து வந்தார்..

#இவரது பாடல்களை புதுடெல்லி சாகித்ய அகாதமி ,ஞானபீடம் ஆகியவை இந்தியில் மொழிபெயர்த்துள்ளனர்..

#இவர் திரைப்படஆசிரியரும் கூட..

#இந்தியாவில் குழந்தைகளுக்காக தொழில்முறை நடிகர்கள் டிகேஎஸ் சகோதரர்கள் நடிக்கப்பட்ட முதல் குழந்தை நாடகமான "அப்பாவின் ஆசை"ஆசிரியர் என்று சிறப்பிக்கப்பட்டவர்.

#அந்த நாடகத்தின் கதை தலைவன் இன்றைய புகழ்மிக்க நடிகர் கமலஹாசன் 7 முதல் 12 வயது வரை ஐந்து ஆண்டுகள் நடித்தார் ..

#அப்பாவின் ஆசை & பலாப்பழம் என்ற நாடகங்களுக்கு சங்கீத நாடக சங்கத்தின் வாயிலாக ரூபாய் 3000 ரூபாய் 5000 பரிசு பெற்றார் ..

#அவர் குழந்தைகள் நாடகங்கள் உடன் சமூக நாடகம், கவிதை நாடகம், இசை நாடகம் ,நாட்டிய நாடகம் ,நகைச்சுவை நாடகம், வரலாற்று நாடகம், மேடை நாடகம் என ஒன்பது வகை நாடகங்களை படைத்துள்ளார்..

 #இசைத்தென்றல் புவனேஸ்வரியின் புகழ் அருவி,வெண்புறாக்கள் போன்ற 14க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் இவர்..

 #இவரது கந்தன் காவியம் நாடகம் 1000 தடவைகளுக்கு மேல் அரங்கேறி உள்ளது,,அப்போதைய ஜனாதிபதி.ஆர்.வெங்கட்ராமன் அவர்களால் பாராட்டப்பட்டவர்...ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காத நாடகம் என ஜனாதிபதி வாழ்த்துரை வழங்கினார்..

அண்ணா,எம்.ஜி.ஆர்.கலைஞர்,ஜெயலலிதா அம்மையார் உள்ளிட்ட 5 முதலமைச்சர்களால் பாராட்டி பெருமை பெற்றவர்.

#ஐநூறாவது நிகழ்ச்சி திரு வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

 #இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்கள் மாநாடு திருச்சியில் நடைபெற்றபோது நாடக பாவலர் என்ற விருதை பெற்றார்..

 #சிறந்த நாடகாசிரியர் என்பதற்காக தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் இவருக்கு கலைமாமணி விருது சென்னை கலைவாணர் அரங்கில் 26.01.1984 ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் வழங்கப்பட்டது...

#முத்தமிழ் காவலர் திரு விசுவநாதன் அவர்களால் கவிதை தென்றல் என்ற பட்டமும் பெற்றார்...

#நெல்லையில் வள்ளியப்பா இலக்கிய வட்டம் சார்பாக நடைபெற்ற குழந்தைகள் கலைத் திருவிழாவில் வள்ளியப்பா இலக்கிய விருதும்,

#திருவரங்கத்தில் செண்பகத் தமிழ் அரங்கில் 500வது தமிழ் பெருவிழாவில் இயற்றமிழ் மாமணி என்ற விருதும் பெற்றார்...

 #சென்னை கலைவாணர் அரங்கில் பாலம் தொண்டு நிறுவனம் சார்பாக 2 10 2004 அன்று நடைபெற்ற ஆதித்தனார் நூற்றாண்டு விழாவில் இவருக்கு முத்தமிழ் வித்தகர் என்னும் விருது இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தலைமையில் வழங்கப்பட்டது...

#கவிமாமணி,இசைபாவரசு ,தெய்வீக கவிமணி, கவிதா பூஷணம், சாதனைகவிஞர், கவிதை தென்றல், இசை சிற்பி, சிறந்த பத்திரிகை ஆசிரியர் ,கந்தன் காவியக் களையரசு ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரர் திருச்சி பாரதன் அவர்கள்..

 #தினத்தந்தி நாளேட்டில் முதல் 5 ஆண்டுகள் துணை ஆசிரியராகவும் பின்னர் 32 ஆண்டுகள் செய்தி ஆசிரியராகவும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்...

#ஐந்து பல்கலைக்கழகங்கள் அவரது தமிழை சிறப்பித்துள்ளனர்..

#காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை அவரது நூல்கள் பற்றி எம்பில் பட்டத்திற்கு 

ஆய்வும்,புதுச்சேரி பல்கலைக்கழகம் அவரது நூலுக்கு 5,000 ரூபாய் பரிசும் வழங்கி சிறப்பித்துள்ளது ...

#அன்னார் 2008 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்...

கவிஞர் திலகம்,கலைமாமணி,திரு.திருச்சி பாரதன் அவர்கள் மக்கள் நேரம் செய்தி நிறுவனத்தின் நிறுவனர் உயர்திரு. பாரதராஜா யாதவ் அவர்களின் தந்தை ஆவார்.

கட்டுரை -நன்றி

வெற்றி வீரன்

Post a Comment

0 Comments