மெரினாவில் 72 விமானங்களின் சாகச நிகழ்ச்சி..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வருகை......
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகும். இங்கு வைத்து இன்று இந்திய விமான படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி இந்திய விமான படையின் 72 ரக விமானங்கள் கலந்து கொள்ளும் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு பொதுமக்களுக்காக இலவச அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை இன்று நேரில் காண்பதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் செல்கிறார்கள்.
அதேபோன்று இந்தியாவின் முப்படை தளபதிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஏராளமான கூட்டம் கூடிய நிலையில் மிகவும் அற்புதமாகவும் பிரம்மாண்டமாகவும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும் இருந்தது. மேலும் இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1 மணி வரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதோடு பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments