• Breaking News

    நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் தங்க நகைகள் திருட்டு

     


    சென்னை காரப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் நடிகர் கருணாகரன். இந்நிலையில் இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகள் திடீரென காணாமல் போகின. இதுகுறித்து கருணாகரனின் மனைவி, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கருணாகரனின் வீட்டில் வேலை செய்து வந்த, காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயா (44) என்பவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து விஜயாவை கைது செய்த போலீசார், நகைகளை பறிமுதல் செய்தனர்.சுந்தர்.சியின் கலகலப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கருணாகரன். தொடர்ந்து சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, லிங்கா, இறைவி, ஒருநாள் கூத்து என 25க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

    No comments