பெங்களூரு கட்டடம் இடிந்து விபத்து..... பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட பாபுசாப்பாளையாவில் நேற்று மாலை கனமழை பெய்தது. புதிதாக கட்டப்பட்டு வந்த ஆறு மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுக்குள் சிக்கியிருந்த ஒரு தொழிலாளி, தலையில் பலத்த காயத்துடன் வெளியே வந்தார். கட்டடத்தில் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக கூறினார்.
தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து வந்தனர். மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். ஆனாலும் கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, மூன்று பேர் இறந்தனர். இரவு முழுவதும், தொடர்ந்து 14 மணி நேரமாக மீட்பு பணி நடந்த நிலையில், மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
No comments