தூத்துக்குடியில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் லட்சுமணன், ஒடிசா மாநிலத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல் பரவியதால் அவரது உறவினர்கள், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
லட்சுமணன், குடும்ப பகை காரணமாக 5 கொலை வழக்குகளில் தொடர்புடைய நபராக கருதப்படுகிறார். அவர் 2 மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் வேலை செய்ய சென்றதாகவும், அங்கு போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.உறவினர்கள், இதை மனித உரிமை மீறலாகக் கருதி, மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நீதிமன்றத்திற்கும் மனு அளித்துள்ளனர்.
இச்சம்பவம், தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, சமூகத்தில் பரவலாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.
0 Comments