அதிமுக சார்பில் ஆரணியில் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...... முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பங்கேற்பு


திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம்,அயன் பாக்ஸ்,சைக்கிள்,வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரணி பஜார் வீதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார்.ஆரணி பேரூர் கழகச் செயலாளர் ஏ.எம்.தயாளன்,ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.பிரகாஷ், முத்துக்குமார்,கோபால் நாயுடு,  பி.எம்.பிரசாத்,பொன்னேரி செல்வகுமார்,   மாவட்டக்கழகத்துணைச் செயலாளர்கள் சியாமளாதன்ராஜ்,எஸ்.எம்.ஸ்ரீதர்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பி.டி.பானுபிரசாத், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ்.மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இந்நிகழ்ச்சியில்,சிறப்பு அழைப்பாளராக அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும்,கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் கலந்து கொண்டு அதிமுக 53 ஆண்டுகள் கடந்து வந்த பாதை குறித்தும்,தமிழக மக்களுக்கு அதிமுக செய்துவந்த நலத்திட்ட உதவிகளையும் எடுத்துக் கூறினார்.மேலும்,திமுக அரசால் தமிழக மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை பட்டியலிட்டு எடுத்துக் கூறினார்.எனவே,2026-ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை தமிழகம் முதல்வராக அரியணையில் அமர வைத்தால் மக்கள் நல திட்டப் பணிகள் மீண்டும் தொடரும் என்பதை எடுத்துக் கூறினார். இதன் பின்னர்,6 பேருக்கு தையல் இயந்திரம்,3 பேருக்கு அயன் பாக்ஸ்,3 பேருக்கு சைக்கிள்,200 பேருக்கு வேட்டி,800 பேருக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவி பொருட்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.எஸ்.விஜயகுமார்,கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் பொன் ராஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் பஞ்செட்டி கே.நடராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய,பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில்,ஆரணி பேரூர் அம்மா பேரவை செயலாளர் கே.என்.சீனிவாசன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம்  பி.பலராமன் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments