• Breaking News

    திருவள்ளூர்: மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் 53 ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்


    திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் சார்பில் நாலூர் ஊராட்சியில் மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார் தலைமையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் அறிவித்தலின்படி நாலூர் பகுதியில் அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவையெட்டி அங்குள்ள புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்தும்  இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.

     அப்போது மிஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன் அவைத்தலைவர் மாரி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வெற்றி வேலூர் சம்பத் கொண்டகரை அமிர்தலிங்கம் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் நெய்தவாயில் என் ஆர் கோபால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் .



    No comments