தேரழுந்தூரில் ரஹீமீ ஆலிம்கள் பேரவையின் மீலாது நிகழ்ச்சி நடைபெற்றது..... ஆண்கள் பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு......
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரஹீமீ ஆலிம்கள் பேரவையின் மீலாது விழா குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் ரஹீமியா நிக்காஹ்மஹாலில் ரஹீமிய்யா அரபிக் கல்லூரி மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ரஹீமீ ஆலிம்கள் பேரவை இணைந்து நடத்திய எட்டாம் ஆண்டின் மாபெரும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு T.பண்டாரவாடையைச் சார்ந்த அல்ஹாஜ் எம்எஸ் ஜாபர் அலி தலைமையில் நாட்டார்மை பஞ்சாயத்தார்கள் ரஹீமிய்யா அரபிக் கல்லூரி நிர்வாகிகள் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.ரஹீமை ஆலிம்கள் பேரவையின் தலைவர் A.C முபாரக் ஹஸ்ரத் ரஹீமீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.கிராத் நபி புகழ் பாடல் மற்றும் வரவேற்புரையை தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ரஹீமிகளின் வாழ்த்துரைகளை வழங்கினர்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் டாக்டர் V.S. அன்வர் பாதுஷா உளவி ஹஜ்ரத்.கடையநல்லூர் அஸ்லமிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி ஹாபிழ் M.A.சவுக்கத் அலி உஸ்மானி ஹஜ்ரத் சிறப்புரை நிகழ்த்தினார்கள் அதில் வக்பு சொத்துக்களை பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் ,கேரளா , வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நபிகளார் கூறிய மனிதநேய அடிப்படையில் முண்டக்கை இமாம் செயல்பட்டதை சுட்டிக்காட்டியும் உரை நிகழ்த்தினர்.மேலும் ரஹீமிய்யா அரபிக் கல்லூரி மாணவர்களால் எழுதப்பட்ட கன்ஜீல் இர்ஷாத் கையேட்டுப் பிரதியும் வெளியிடப்பட்டது ரஹீமீ ஆலிம்கள் பேரவையின் செயலாளர் மௌலவி ஹாபில் ஜே ஷேக் முகமது ரஹீமீ நன்றியுரை வழங்கஅரும்பாக்கம் பள்ளியின் இமாம் மவ்லவிஹாபிழ் பஷீர் அகமது ரஹீமீ அவர்களின் துவாவுடன் கூட்டம் நிறைவடைந்தது.
No comments