• Breaking News

    சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி..... 5 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்று வாகனங்கள்......

     


    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மதுராந்தகம் அருகே திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது.

    இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மின் வாரியத்துறை ஊழியர்கள் மின் கம்பத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    No comments