• Breaking News

    தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை.....?

     


    இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்குப் பிறகு வரும் நவம்பர் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், அந்த நாளில் விடுமுறை வழங்கினால் நான்கு நாள்கள் தொடர்ந்து விடுமுறையாக கிடைக்கும். 

    இதற்கான விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அமிர்தகுமார் தனது கடிதத்தில், தீபாவளிக்குப் பிறகு அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை அனுபவிக்க வேண்டி நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    No comments