அரியலூர் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராமலிங்கத்தின் வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ராமலிங்கம், மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தேன்மொழி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், குடும்பத்துடன் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.
இந்த நேரத்தில், வெற்றிவேல் என்பவர் பத்திரிகை வைப்பதற்காக வீட்டிற்குச் சென்ற போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கவனித்தார். உடனே ராமலிங்கத்தை தொடர்பு கொண்டார். அவர்களும் உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.மேலும், வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மீன்சுருட்டி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
0 Comments