பல்லாவரத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா குழந்தை இயேசு ஆலயத்தின் 30-வது ஆண்டு தேர்பவணி விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது
சென்னை ஜமீன் பல்லாவரம் குளத்து மாநகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா குழந்தை இயேசு ஆலயத்தின் 30 ஆவது ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாப்பட்டது.
திருவிழாவையொட்டி அன்னையின் திருக்கொடியேற்றம் மற்றும் சிறப்பு திருப்பலி ஆகியவை நடைபெற்றது.சிறப்பு பிராத்தனையை பங்குத்தந்தை இமானுவேல் ஸ்டீபன் செய்தார்.அதனைத் தொடர்ந்து தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் அலங்கார தேர்பவனி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அன்னை வேளாங்கண்ணி மாதா வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவணையில் முக்கிய வீதியில் வழியாக கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் அன்னை வேளாங்கண்ணி மாதாவிற்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து மாதாவே வழிப்பட்டனர்.
தேர்பவணி செல்லும் இடமெல்லாம் அன்னை வேளாங்கண்ணி மாதாவிற்கு மலர் தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்து தேர் திரு விழாவை பக்தர்களுக்கு வெகு சிறப்பாக கொண்டாடினர்.தேர்பவணி குளத்துமாநகரில் முக்கிய வீதிகளில் சென்றடைந்து இறுதியாக்ச் தேவாலயம் வந்தடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments