சென்னையில் மழை தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில் எங்காவது எடப்பாடி பழனிச்சாமியின் கால் பதிந்துள்ளதா....? அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
சென்னையில் கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் மழையின் தாக்கம் குறைந்து வழக்கம் போல் சென்னை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. சென்னையில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கிய போதிலும் தமிழக அரசின் முயற்சியால் மோட்டார் பம்புகள் மூலம் உடனடியாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு அகற்றப்பட்டது. சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் விரைவில் வடிந்தது. மழை எச்சரிக்கை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் பேசியதாவது, சென்னையில் மழை பெய்த போதிலும் உடனடியாக வெள்ளநீர் அகற்றப்பட்டது. எல்லையில் எப்படி ராணுவ வீரர்கள் மக்களை காக்க போராடுகிறார்களோ அதே போன்று முதல்வர் ஸ்டாலினும் இரவு பகல் பாராமல் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க போராடுகிறார்.
சென்னையில் மழை தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில் எங்காவது எடப்பாடி பழனிச்சாமியின் கால் பதிந்துள்ளதா.? அவன் மழை பாதித்த ஏதாவது ஒரு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டாரா அல்லது ரொட்டியோ, பாலோ, பிஸ்கட்டோ மக்களுக்கு வழங்கினாரா.? முதலில் அதிமுக கட்சியில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். மேலும் அதன் பிறகு அரசு வெள்ளை அறிக்கை வெளியிடும் என்று கூறினார்.
No comments