மயிலாடுதுறை: நரிக்குறவர் மாணவ உண்டு உறைவிட பள்ளியில் தங்கிப் பயிலும் குத்துச்சண்டை வீரர்கள் 20 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க உதவித்தொகை..... பள்ளி தலைமை ஆசிரியரிடம் நகர்மன்ற உறுப்பினர் வழங்கினார்
மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை கிராமத்தில் நரிக்குறவர் சமுதாய மாணவ மாணவிகள் தங்கிப் பயிலும் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. 90-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் நரிக்குறவ மாணவர்கள் சுமார் 20 பேர் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் ரஜினி என்பவர் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு நல உதவித் தொகையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் குத்துச் சண்டை பயிற்சி பெறுவதை அவர் பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவர் மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
No comments