• Breaking News

    திமுக என்ற நரகாசுரனை 2026 தேர்தலில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

     


    தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினார்.

    இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக என்ற நரகாசுரனை 2026 தேர்தலில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், இதுவரை வாய் திறக்காதவர்களும், தற்போது வாய் திறந்து வாழ்த்து தெரிவித்து இருப்பதாகவும், இதுவே தங்களுக்கு வெற்றி தான் எனவும் கூறினார்.அதேபோல், தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம் என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

    No comments