• Breaking News

    தேனி: உத்தம பாளையத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி..... 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


    தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி (கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) சார்பில் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணமாக இன்று மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகள் அலைபேசியில் அதிகமாக மூழ்கி விடாமல் இருப்பதற்காகவும், மாணவ மாணவியரின் உடல் திறன் மேம்படுத்தும் வண்ணமாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் தனியார் பள்ளி சார்பில் தேனி மாவட்ட அளவில் ஆன பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்ட மராத்தான் போட்டி நடைபெற்றது.

    உத்தமபாளையம் ஞான அம்மன் கோவில் முன்பு துவங்கிய இந்த மரத்தான் போட்டியானது உத்தமபாளையம் பேருந்து நிலையம், மெயின் ரோடு,  கோகிலாபுரம், ஆனைமலையான் பட்டி பகுதி வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.

    இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ மாணவிகள் தேனி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிப்படுத்தினார்.

    போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளை சாலையோரம் நின்று பொதுமக்கள் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்டோர்  உற்சாகப்படுத்தினார்.இந்த மாரத்தான் போட்டியின் பள்ளி மாணவ மாணவியர் உற்சாகத்துடன் சாலையில் ஓடிச் சென்று இலக்கினை அடைந்தனர்.

    இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பெட்டகங்கள், மெடல் சான்றிதழ்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.இந்த பரிசளிப்பு நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்வில் ஏராளமான கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

    No comments