• Breaking News

    காதலியுடன் தனிமையில் இருந்த போட்டோவை வைத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய காதலன் கைது

     


    சென்னை பல்லாவரம் பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியில் தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்த நிலையில் சதீஷ்குமார் என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டார். இதில் சதீஷ்குமார் ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய காதல் விவகாரம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் காதலுக்கு ஒப்புக்கொண்டு கடந்த வருடம் மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். ஆனால் திடீரென 3 மாதத்திற்கு பிறகு திருமணத்தை நிறுத்திய சதீஷ்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    அதோடு தகாத வார்த்தைகளால் பெண்ணை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முன்னதாக இருவரும் காதலித்தபோது தனிமையில் எடுத்த போட்டோக்களை சதீஷ்குமார் மிரட்டி 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி பல்லாவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments