17,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த விமான நிறுவனம்
போயிங் நிறுவனம் 17,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களின் 10% ஆகும். 777X விமானத்தின் வெளியீடு ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படும், மேலும் நிதி இழப்புகள் மற்றும் தொழிற்சங்க பணி நிறுத்தம் காரணமாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2019 முதல் $25 பில்லியனுக்கும் மேலான இழப்புகளை சந்தித்துள்ள போயிங், அதன் நிதி நிலையை சீரமைக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலைமையில், தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு மற்றும் மற்ற உள்நோக்க சிக்கல்களை சந்தித்துள்ள போயிங், தொழிலாளர்களை நீக்கும் முடிவை மேற்கொண்டுள்ளது.
No comments