ஐப்பசி மாத பூஜைகாக சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 16-ஆம் தேதி திறப்பு
ஐப்பசி மாத பூஜையையொட்டி, ஐயப்பன் கோயில் நடையை வரும் 16 -ஆம் தேதி, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
அக்டோபர் 17 -ஆம் தேதி முதல் 21 -ஆம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது.
21 -ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பின்னர் ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு கோயில் நடை அடைக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
No comments