• Breaking News

    தீபாவளி பண்டிகை..... தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள்.....


     தமிழ்நாட்டில் பொதுவாக பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசாங்கம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சுமார் 16,500 பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  சென்னையில் இருந்து மட்டும் 3 நாட்களுக்கு 10,500 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் வருகிற 19ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தீபாவளி பண்டிகையின் போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செல்வார்கள் என்பதால் அதனை முன்னிட்டு அதிகாரிகள் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனராம். மேலும் அரசு பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது அதிகாரபூர்வ செயலி வாயிலாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    No comments