சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சங்கம் அமைக்க அனுமதி மறுப்பதை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சாலை மறியல் 16 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி எதிரில் இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியலுக்கு, இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சங்கம் அமைக்க அனுமதி தர வேண்டும் என்றும்,ஊழியர்களின் தொழிற்சங்க உரிமையை பறிக்க கூடாது எண்றும், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சாம்சங் ஊழியர்களின் உரிமையை நிலைநாட்ட கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட 16 பேரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
No comments