மகனின் படிப்பை பாராட்டி ரூ.1.5 லட்சம் மதிப்புடைய போன் வாங்கி கொடுத்த குப்பை வியாபரி தந்தை
இந்தியாவில் ஆப்பிள் ஐ-போன் 16 அறிமுகமாகியதையடுத்து, குப்பை வியாபாரி ஒருவர் தனது மகனுக்கு இந்த மொபைலை பரிசளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தனது மகன் நன்றாக படிப்பதை பாராட்டும் விதமாக, ரூ.1.5 லட்சம் மதிப்புடைய ஐ-போன் 16 மொபைலை வாங்கி அவர் மகனுக்கு பரிசளித்துள்ளார்.
இந்த சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல், அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும் நெட்டிசன்கள் பலரின் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது. குப்பை வியாபாரி தனது சாதாரண வாழ்க்கையிலிருந்து மகனுக்கு உயர்ந்த பரிசை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் ஐ-போன் 16 இந்திய சந்தையில் அறிமுகமாகி, இளைஞர்கள் வரிசையில் காத்துக்கிடந்த மத்தியில், இப்படி ஒரு சம்பவம் மிகவும் வேறுபட்டதாக காணப்படுகிறது. மகனின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக அவர் எடுத்த இந்த முயற்சி மிகவும் சிந்திக்கத்தக்கது.
No comments